முற்கால சேதுபதிகள்

சேதுபதிகள் தமிழ் மண்ணை ஆண்ட நான்காவது பேரரசர்கள்...

தமிழகம் பல போர்களையும் பல சாம்ராஜ்ஜியங்களையும் கண்டது அதில் தமிழ் பேரரசை கட்டமைத்தவர்களுள் குறிப்பிட தக்கவர்கள் சேதுபதிகள்...

இவர்கள் வரலாறு நமக்கு 15ம் நூற்றாண்டில் இருந்து மட்டுமே கூறப்பட்டு வருகிறது...
ஆனால் அதற்கு முன்பே படையெடுத்து வெற்றிகளை குவித்து கோவில்களை கட்டுவித்து கோட்டைகளை அமைத்து மறவர் நாட்டை உருவாக்கியவர்கள்...

அவர்களில் முதன்மையாக அறியப்படுபவர்கள்...

முற்கால சேதுபதிகள்...

1. ஆதி இரகுநாத சேதுபதி  

                 பெயருக்கு ஏற்றது போல் இவரே ஆதி (முதல்) சேதுபதியாக வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார்கள்...

2. ஜெயதுங்க இரகுநாத சேதுபதி

3. அதிவீர இரகுநாத சேதுபதி

                   சோழனை வென்று பாண்டியனிடம் தொண்டியை பரிசாகபெற்று "தொண்டியன் துறையன்" என்ற விருது பெயரை பெற்றவன்...

4. வரகுன இரகுநாத சேதுபதி

                     சோழநாட்டில் இருந்து தெலுங்கு படைகளை விரட்டி பாண்டியருக்கு உதவி செய்த சேதுபதி

5. குலோத்துங்க இரகுநாத சேதுபதி

                        படை எடுத்த சோழனை விரட்டி அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகளை பிடித்து கொண்டதன் மூலம் கண்டது விடான் வென்றது கொடாண் என்ற விருதை பெற்றவன்...

6. சமர கோலாகல சேதுபதி

                           சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையில் எழுந்த எல்லைத் தொல்லையை தீர்த்து முத்துக்குளி உரிமையையும் விருதையும் பெற்றுள்ளார்...

7. மார்த்தாண்ட பைரவ சேதுபதி

8. சுந்த பாண்டிய சேதுபதி

9. காங்கேய இரகுநாத சேதுபதி

10. விஜய முத்துராமலிங்க சேதுபதி...


கிழவன் சேதுபதி எனும் மாமன்னனால் பிற்காலத்தில் கட்டப்பட்ட இராமநாதபுரம் கோட்டை பிறகு வெள்ளையர்களால் அழிக்கபட்டு சிறு கொத்தலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன...

முற்கால சேதுபதிகளை பற்றி அறிய உதவும் ஆவணங்கள்...

வரலாற்று பேராசிரியர் மீ.மனோகரன் அவர்களின் குறிப்புகளில் இருந்து


இவைகள் முற்கால சேதுபதிகளை பற்றிய வரலாற்றை நமக்கு தெரியவைக்கும் ஆவணங்களாக பார்க்கபடுகிறது.... 

மதுரை மேனுவல் மற்றும் தி இராம்நாட் சமஸ்தானம் புத்தகம் (சேதுபதிகளை பற்றி தனியாக முதலில் இராஜாம் ராம் அவர்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் கிடைக்க பெற்ற தகவல்கள்...

இராகவையங்கார் எழுதிய குறிப்புகள்


01) குலோத்துங்க சோழ நல்லூர்
02) விரையாதகண்டன்
03) செம்பினேந்தல்
04) கரந்தை
05) வீரையம்
06) தேவை(இராமேஸ்வரம்)
07) மணவை
08) மழவை
09) புகலூர்(போகலூர்)
10) இராமநாதபுரம்

பல புத்தகங்களை அடிப்படையாக கொண்டு இராகவையங்கார் எழுதிய புத்தகங்களின் தொகுப்பு...

விடுதலை போரில் சேதுபதி மன்னர்கள் எனும் நூலிலிருந்து 


சேதுபதி மன்னர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் செப்புபட்டயங்களில் தங்களது முன்னோர்கள் இருப்பிடம் மற்றும் அவர்கள் பெயர்களை தாங்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளனர்...

சேதுபதி மன்னர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் செப்புபட்டயங்கள்


 இவைகள் The Ramnad Samasthana Manual மற்றும் History of Nayaks மற்றும் Manual of Madurai போன்ற 18 ம் நூற்றாண்டு புத்தகங்களை வைத்து ஆ ராசு மற்றும் கமால் எழுதியவை....

அனைத்து கல்வெட்டு செப்பேடுகளில் போதுவாக குறிக்கப்பட்ட சேதுபதி முன்னோர்கள் இருப்பிடம்

List of Sethupathi Antiquitie by Swell's 
அனுபந்தம் எனும் நூலில் இருந்து...


ஆங்கில புத்தகங்களின் கிடைக்கபெற்ற தொகுப்புகள்...

முதன்மை துணை நூல்கள்

Madura country manual by J.HA.NELSON 1868...
Indian Antiquary by Jas.Burgess 1883...
The Manual of Ramnad Samasthanam by Raja Ram Rao 1891...
Historical Manuscripts in the tamil language by Taylor and Williams...
ASSI Vol IVth...
Taylor,William Orientel historical manuscripts in the tamil language Vol II...

விரைவில் இவர்களை பற்றிய தெளிவான வரலாறு நமக்கு கிடைக்கும் 

எனினும் சில கல்வெட்டுக்கள் செப்பு பட்டயங்கள் மூலம் இவர்களை அறிந்து கொள்ள முடிகிறது...
பல இடங்களை தலைமையாக கொண்டு பல காலங்களுக்கு முன்னரே ஆட்சி புரிந்து இருக்கிறார்கள்...

Popular posts from this blog

Baskara sethupathi

Grand Entrance of Ramanathapuram Palace

Sethupathi Kingdom Coins