சேதுபதி வரைந்த ஓவியங்கள் I
001. வால்மீகி ஆசிரமத்தில் நாரதர் வால்மீகிக்கு இராமாயணம் சொல்லுதல், வால்மீகி சந்தாநத்துக்குப் புறப்பட்டது, வேடன் அம்பு கொண்டு பட்சியை எய்யும் காட்சி மற்றும் வால்மீகி வேடனை சபிக்கும் காட்சி...
002. வால்மீகி வேடன் சாபம் குறித்து பரத்துவாச முனிவரிடம் கூறுதல் மற்றும் சரயு நதியில் குளிக்கும் காட்சி
003. பிரம்மன் வால்மீகி முனிவருக்கு சரசுவதி அருளை வரமாய் அளிக்கும் காட்சி மற்றும் வால்மீகி குசலவருக்கு இராமாயணத்தை விளக்கும் காட்சி
004. குசலவர் வால்மீகியுடன் அயோத்தி சென்று இராமரிடத்தில் இராமாயணத்தைப் பாடி பரிசு பெறும்
005. சுமந்திரர் சனக்குமாரர்களிடம் கேட்ட கதையை விளக்குதல்
006. தசரதர் சுமந்தரர் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசித்தல், சுமந்தரர் ரோமபாத மன்னரை சந்தித்தல், ரோமபாத மன்னர் கலைக்கோட்டு முனிரை அழைத்து வர வேசியர்களுக்கு வெகுமானம் அளித்தல்
007. கலைக்கோட்டு முனிவரை அழைக்கச் சென்ற வேசியர்கள் அவரிடம் ஒப்புதல் பெறுதல் மற்றும் அவர்களை கலைக்கோட்டு முனிவர் உபசரிக்கும் காட்சி
008. வேசியர்கள் தாம் கொணர்ந்த பதார்த்தங்களை கலைக்கோட்டு முனிவருக்கு அளித்தல் மற்றும் பல்லக்கு ரூபமாய் மாறி முனிவரை அங்கதேசத்திற்கு அழைத்து செல்லுதல்...
009. கலைக்கோட்டு முனிவரை ரோமபாத மன்னர் வரவேற்றல்,முனிவரின் வருகையால் மழை பொழிதல்,மகிழ்ச்சியடைந்த மன்னர் தன் மகள் சாந்தையை திருமணம் புரிய கலைக்கோட்டு முனிவரை வேண்டுதல்...
010. கலைக்கோட்டு முனிவர்- சாந்தை திருமண நிகழ்வு மற்றும் தம்பதியர்கள் இருவரும் தனித்து இருக்கும் காட்சி
011. தசரதர் புத்திரகாமேஷ்ட்டி யாகம் செய்ய கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அழைப்பது குறித்து சுமந்தரருடன் ஆலோசித்தல் மற்றும் இருவரும் சரயு நதி கடந்து அங்க தேசம் செல்லுதல்
012. தசரதர், சுமந்திரர்,மந்திரியர் மற்றும் சேனைகளுடன் கலைக்கோட்டு முனிவரை அழைத்து வர அங்கதேசம் செல்லும் காட்சி
013. ரோமபதன் மன்னர் தசரதரை எதிர்கொண்டு வரவேற்கும் காட்சி மற்றும் கலைக்கோட்டு முனிவருடன் ஆலோசிக்கும் காட்சி
014. தசரதர் கலைக்கோட்டு முனிவரை அழைத்துக் கொண்டு அயோத்தி நகரை நோக்கி செல்லுதல்
015. அசுவமேத யாகத்திற்காக பிராமணர்கள் உணவு சமைக்கும் காட்சி
016. அசுவமேத யாகம் நிறைவேறியவுடன் புத்திரகாமேஷ்ட்டி யாகம் செய்யும் காட்சி
017. தசரதர் பிண்டத்தை தன் பட்டத்தரசியர்க்கு பகிர்ந்தளிக்க அவர்கள் உண்ணும் காட்சி
018. சுமித்திரை இலக்குவண் மற்றும் சத்ருகணனை, கைகேயி பரதனை, கௌசல்யா இராமசுவாமியை கையிலேந்தி மகிழும் காட்சி
019. இராமன், இலக்குவன், பரதன், சத்ருகணர்களுக்கு பாலூட்டும் காட்சி
020. இராமன், பரதன் தவழ்ந்து விளையாடுகையில் தாயார் வெண்ணெய்க் கொடுக்கும் காட்சி மற்றும் இலக்குவனுக்கு சங்கில் பால் கொடுக்கும் காட்சி
021. தசரதர் மற்றும் மனைவியர் வசிட்டரிடம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டுதல்
022. இராமன், இலக்குவன், பரதன் மற்றும் சத்ருகணருக்கு வசிட்டர் கல்வி கற்பிக்கும் காட்சி
023. இராமர் மல்லகசெட்டி சிலம்பம், கைச்சிலம்பம், பணிக்கச் சிலம்பம், பட்டா வீசுதல் ஆகிய பயிற்சிகளை பெறுதல்
024. இராமன், இலக்குவன்,பரதன் மற்றும் சத்ருகணன் வில்வித்தை, குதிரையேற்றம், யானையேற்றம் பயிலும் காட்சி
025. அயோத்திக்கு வருகைபுரிந்த விசுவாமித்திரரை தசரதர் வரவேற்றல் மற்றும் யாகம் நிறைவேற இராம இலக்குமணரை தன்னுடன் அனுப்புமாறு விசுவாமித்திரர் கேட்க, அதை தசரதர் மறுக்கும் காட்சி
026. தசரதர் இராம இலக்குமணரை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் விசுவாமித்திரர் கோபமுடன் திரும்புதல், வசிட்டரின் அறிவுரையின்படி விசுவாமித்திரரை தசரதர் அரண்மனைக்கு மீண்டும் அழைத்து வருதல்
027. விசுவாமித்திரர் இராமர் மற்றும் இலட்சுமணருக்கு மந்திர உபதேசம் செய்தல், வனத்தில் கௌக்காமா ஆசிரமத்தில் தங்கி ரிஷிகளுடன் உரையாடுதல்
028. சரயு நதிக்கரையில் இராம இலக்குவனர் படுத்து ஓய்வெடுத்தல், குளித்தல் மற்றும் சந்தி செய்தல்
029. சிவம் செய்தல், பரமனாச்சிரமம் என்ற வனத்தில் செல்லுகையில் தாடகையைப் பற்றி விசுவாமித்திரர் இராம இலக்குமணரிடம் விளக்குதல் மற்றும் தாடகை அவர்கள் முன் தோன்றும் காட்சி
030. விசுவாமித்திரர் இராம இலக்குமணருக்கு தேவ அஸ்திரங்களை விளக்குதல், தேவர்கள் இராமரை சந்தித்தல் மற்றும் விசுவாமித்திரர் இராம இலக்குமணருடன் தன் ஆசிரமம் அடையும் காட்சி
031. அரக்கர்கள் யாகத்தை இடையூறு செய்யாத வண்ணம் இராம, இலட்சுமணர் காத்தல். இராமர், யாகத்திற்கு ஊறு விளைவிக்க வந்த சுபாகு என்ற அரக்கனை கடலில் விழச்செய்தும், மாரீசன் என்பவனை விரட்டியும் யாகத்தை நிறைவு செய்யும் காட்சி
032. யாகம் நிறைவேறியவுடன் ரிஷிகள் இராம இலக்குமணரை பாராட்டும் காட்சி மற்றும் சனகர் செய்யும் யாகத்திற்காக விசுவாமித்திரர் இராம, இலக்குவனரை அழைத்துச் செல்லும் காட்சி
033. விசுவாமித்திரர் நீராடுதல் மற்றும் விசாலபட்டிணம் அரசர் விசுவாமித்திரர்,இராமர்,இலட்சுமணரை வரவேற்று உபசரிக்கும் காட்சி
034. இராமர் பாதம் பட்டு அகலிகை சாப விமோசனம் அடையும் காட்சி மற்றும் அகலிகை,கௌதமர் அவர்களின் ஆசிரமத்திற்கு அனைவரும் செல்லும் காட்சி
035. இராமர்,இலட்சுமணர்,விசுவாமித்திரரை கௌதமர் உபசரித்தல், மிதிலை நகரை மூவரும் அடையும் காட்சி
036. அரண்மனை அடைந்த விசுவாமித்திரர்,இராமர்,இலட்சுமணரை ஜனகர் வரவேற்று உபசரிக்கும் காட்சி
037. விசுவாமித்திரர் ஜனகரிடத்தில் தசரத குமாரர்களை அறிமுகம் செய்துவிட்டு விடுதியில் தங்கும் காட்சி
038. ஓய்விற்கு பின் விசுவாமித்திரர்,இராமர்,இலட்சுமணர் ஜனகரை சந்தித்தல் மற்றும் ஜனகர் தனுசுவை எடுத்து வருமாறு கூறும் காட்சி
039. சிவபெருமான் அளித்த வில்லை உடைப்பவர்களுக்கு சீதையை மணமுடிப்பதாய் ஜனகர் தெரிவித்தல் மற்றும் கிங்கிலியர்கள் வில்லை கொண்டு வரும் காட்சி
040. சிவதனுசை உடைத்த இராமபிரானுக்கு தன் மகள் சீதையை திருமணம் செய்ய ஜனகர் சம்மதம் தெரிவிக்கும் காட்சி
041. விசுவாமித்திரரும் ஜனகரும் மந்திரியிடம் திருமண அழைப்பிதழை கொடுத்து அயோத்திக்கு அனுப்பும் காட்சி
042. ஜனகரின் மந்திரி அயோத்திக்கு பயணிக்கும் காட்சி
043. ஜனகரை சந்தித்தப்பின் தசரதர் மற்றும் ஏனையோர் தங்கும் பொருட்டு கூடாரம் அமைக்கும்படி பணித்தல்
044. தசரதரும் ஜனகரும் திருமணத்திற்கான நிச்சயம் செய்யும் காட்சி
045. கைகேய நாட்டு அரசர் திருமணத்திற்காக மிதிலை சென்று ஜனகரை சந்திக்கும்
046. இராமர், இலக்குமணர், பரதர், சத்ருக்கணருக்கு திருமண் காப்புத் தரிக்கும் காட்சி
047. பெண்கள் இசை முழங்கி பல்லக்கில் மன்னரை அழைத்து செல்லும் காட்சி
048. பெண்கள் மன்னரின் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி
049. ஓவிய மண்டபத்து உட்புறக் காட்சி