திருமயம் கோட்டை
திருமயம் கோட்டை
இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இரண்டாம் இரகுநாத சேதுபதி (எ) கிழவன் சேதுபதி 1687-ஆம் ஆண்டு திருமயம் கோட்டையை நிர்மாணித்தார். புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது
இந்த கோட்டை தற்போது நாம் காணும் கோட்டை பகுதிகளை விட இருமடங்கு பெரிதாக பழைய கோட்டை பகுதிகள் அமைந்திருந்தாக வரலாறு கூறுகிறது. இதன் முக்கிய நுழைவு வாயில் தற்போதுள்ள கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டா் தெற்கே அமைந்துள்ளது.
இந்த கோட்டையின் அடிவாரத்தில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு அகிய கடவுளா்களுக்கு தனிதனியே அருகருகில் கோயில்கள் அமையப்பெற்றுள்ளது. அக்கோயில் தா்பார் மண்டபம், தூண்களுடன் கூடிய பிரகாரம் மற்றும் பல்வேறு கடவுளா்களுக்கான சிலைகள் அமைந்துள்ளன.
இந்த கோவில்களுக்கு அருகில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்றும் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் இந்த கோட்டை இருந்து வருகின்றது...