Pandi Durai Thevar
வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர்
அமைத்தவர்
Born:21 March 1867
Died: 2 Dec 1911
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்.
பிறப்பு
'சேது சமஸ்தானம்' என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத் தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867, மார்ச் 21ம் தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிர பாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.
பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர், தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் 'சோமசுந்தர விலாசம்' என்று பெயரிட்டார்.
நான்காம் தமிழ் சங்கம் உருவான வரலாறு
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, 'திருக்குறள் பரிமேலழகர் உரை' நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர். பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது. அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. 'தமிழ் ஆய்வு மையம்' அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த 'செந்தமிழ்' ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய-
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், புலவர் அப்துல்காதிர் ராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை - ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' ஏடே உதவியது.
சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, ராஜ ராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட (1911, டிச. 2 ) செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
- புலவர் முத்து வேங்கடேசன்
நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை
He founded the Madurai Tamil Sangam on 4 September 1901. This Sangam has been hailed as the Fourth Tamil Sangam. Pandithurai Thevar conducted the literary and cultural affairs of Madurai Tamil Sangam with great devotion and dedication for 10 years till the time of his untimely death at the young age of 45 on 2 December, 1911.Pandithurai Thevar continued the glorious tradition of the Sethupathis of Ramanathapuram by his continued and uninterrupted liberal patronage to distinguished Tamil scholars and poets like Mahavidwan Meenakshisundaram Pillai, Arumuga Navalar, R Raghava Iyengar, M Raghava Iyengar and many others.
As long as he lived, Padithurai Thevar was the life and soul of the Madurai Tamil Sangam. He was its first president and served in that capacity for 10 years from 1901 to 1911. In order to set the activities of the Madurai Tamil Sangam, he took particular care to secure the services of such stalwarts as the famous Ramanad trio, Pandits R Raghava Iyengar, M Raghava Iyengar and Tirunarayana Iyengar, who were placed in charge of the newly started Tamil College and the Tamil magazine Senthamizh. He was also successful in obtaining the services of the celebrated Seithur brothers Subramania Kavirayar and Kandaswami Kavirayar and Arasan Shanmuganar of Sholavandan, all noted for their outstanding scholarship and deep erudition. Besides, scholars from outside such as Dr U V Swaminatha Aiyar and V G Suriyanarayana Sastri (Parithimal Kalaignar) and several others took part in the work of the Tamil Sangam. There is no doubt that during the first quarter of the 20th century, Madurai Tamil Sangam had a very notable record of work to its credit in the field of promotion of Tamil learning and research, a record that has not been beaten by any other organisation till date.
Even before he founded the Tamil Sangam in Madurai, Pandithurai Thevar had made a name for himself in the Tamil world through his poems, writings and speeches. He was celebrated as a powerful speaker. He had published two anthologies in Tamil — one literary and the other religious. He helped his teacher Ramaswami Pillai to bring out an excellent edition of the Thevaram hymns and gave liberal monetary help to many scholars for publishing their works. He presided over many Tamil and Saivite conferences and roused among all Tamilians a great passion for the realisation of the glory of their literary and religious heritage. He was a lover of Carnatic music and extended his patronage to Poochi Iyengar who became the famous Samasthana Vidwan of Ramnathapuram and several other eminent musicians of his day.
Pandithurai Thevar was probably the last of that band of zamindars and noblemen, who ever since the establishment of the Poligar system of rule in the southern districts four centuries ago by Viswanatha Naick of Madurai, nobly served the cause of Tamil learning and culture, both by their personal accomplishments and munificent patronage of Tamil poets and scholars.
The Madurai Thamil Sangam established by Pandithurai Thevar with the assistance of his cousin Bhaskara Sethupathy, the Raja of Ramnad at that time and its journal Senthamizh played an important role in creating a new Tamil Renaissance among the Tamils of South India and Sri Lanka in the first two decades of the 20th century. Its historic importance lies in the fact that it created a class of outstanding Tamil pundits through a well organised and prestigious system of examinations at a time when strong objections were being raised against creating a Chair for Tamil, in the University of Madras.
The fully qualified pundits created by the Madurai Tamil Sangam in Tamilnadu and Sri Lanka were instrumental in shaping the political vocabulary of Tamil identity when Tamil nationalism began to assert itself as a political force on both sides of the Palk Straits after 1930. Pandithurai Thevar viewed the Madurai Tamil Sangam not only as a literary or cultural academy but as a nationalist organisation. This approach was clearly defined by him when he declared: ‘The love for one’s language is not only the basis of patriotism but also of the love for one’s religion.’
When the Madurai Tamil Sangam was established in 1901, Pandithurai Thevar appointed R Raghava Iyengar as the Editor of Senthamizh. He was the court pandit of the Sethupatis of Ramanathapuram. His nephew M Raghava Iyengar succeeded him as Editor of the same journal in 1904 and served for 8 years.
The Sethupathis of Ramanathapuram were great patrons of Tamil literature. One of the greatest of them all was Bhaskara Sethupathi. It was he who patronised Swami Vivekananda. It was he who gave his full support to Pandithurai Thevar when he established Madurai Tamil Sangam. When Bhaskara Sethupathi died, Raghava Iyengar paid his tribute to his great benefactor through his moving elegy in Tamil beginning with the following lines:
"செங்கையால் வாரி அளித்தாயே சேதுபதி என்கையா எங்கட்கு இனிமேல் இடம் "